Friday, 29 April 2016
Wednesday, 27 April 2016
அக்காரக்கனி தரிசனம்

இரு விகற்ப இன்னிசை வெண்பா
நூற்றுப் படியேறி மூச்சிறைக்க முன்னமர்ந்தேன்
நாற்றெலுமிச் சைபானம் நாவில் குளிர்விக்க
வோர்கரம் தோளழுத்த செங்கரம் கைப்பற்ற
நீரிச்சை மந்திக் கிலக்கு.
மூச்சிறைக்க பல படியேறி ஒரு கடை முன் அமர்ந்து எலுமிச்சை சேர்ந்த பானம் அருந்திக் கொண்டிருந்தால் பின்னின்று மந்தியின் ஒரு கரம் என் தோளை அழுத்த மறு கரம் என் கையில் உள்ள பானத்தை பறித்து அருந்தியது.
சோளிங்க நரசிம்ம தரிசனத்துக்கு முன் ஆஞ்சனேயர் தானே தன் தாகம் தீர்த்துக் கொண்டார் போலும்
( பின் மோர் வாங்கி குரங்குகள் அருந்த வைத்து விட்டு வந்தோம்)
சீதா கல்யாண வைபோகமே!

கலிவிருத்தம்
(மா விளம் விளம் மா )
வாச நறுங்குழல் காற்றினி லாட
நேச மதிமுகம் நெஞ்சினில் நிற்க
வீசு நடைபயில் ராமனும் நோக்க
தேசு யிடையெழில் ஜானகி நாண
Subscribe to:
Comments (Atom)